India
கிராம கெளசல்யா யோஜனா: வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? - கனிமொழி MP கேள்விக்கு மத்திய அரசு பதில்!
மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்ட ரீதியாக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்?
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி அடிப்படையில் எவ்வளவு பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது? என்று தி.மு.க மக்களவை குழுத் துணைத்தலைவர் கனிமொழி எம்.பி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்த பதிலில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 300 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 169 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதில் IT துறையில் 52 பேர், சுகாதாரத் துறையில் 3 பேர், ஜவுளி, கைத்தறி உள்ளிட்ட துறைகளில் 15 பேர் மற்ற துறைகளில் 99 பேர் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 169 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் 11,655 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. 5,692 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எஸ்.டி பிரிவில் 2,642 பேர்களுக்கும், எஸ்.டி. பிரிவில் 162 பேர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.சி பிரிவில் 1,877 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
தீபாவளி போனஸ் : கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அறிவித்த தமிழ்நாடு அரசு!