India

அரசு அலுவலகங்களில் கோமிய பினாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - ம.பி அரசின் உத்தரவால் அதிர்ச்சி!

பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் இனி மாட்டுக் கோமிய பினாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பசுவின் கோமியம் எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்தும் என இந்துத்வா கும்பலால் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாட்டுச் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

கோமியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசமும் ஒன்று. மத்திய பிரதேசத்தில் நாட்டிலேயே முதல்முறையாக பசு அமைச்சரவை என தனியான அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கோமியத்திலிருந்து பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறை கோமியத்தை வழங்க உள்ளது.

மேலும், இவ்வாறு கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை மட்டுமே மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோமியம் சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படும் என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், பா.ஜ.க அரசு இவ்வாறு அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அ.தி.மு.கவை உடைப்பதில் வேண்டுமானால் பா.ஜ.க வெற்றி பெறலாமே தவிர, இங்கு காலூன்ற முடியாது”: மு.க.ஸ்டாலின்