India
காசிபூர், சிங்குவில் போலிஸ் அடக்குமுறை.. டெல்லி நோக்கி படையெடுக்கும் உ.பி., ஹரியானா விவசாயிகள்!
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும் அரசிடம் வலியுறுத்துகிறோம் என்று ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பல்பீர்சிங் ராஜேவால் உள்ளிட்ட தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். ஆர்.எஸ்.எஸ் நபர்கள் மூலம் விவசாயிகளுக்கு எதிராக வன்முறை போராட்டத்தை அரசு தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினார்.
டிராக்டர் பேரணிக்கு அனுமதித்த பாதையை பின்னர் போலீசார் தடுத்தனர். தற்போது 36 தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போராட்டம் நடக்கும் இடங்களில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையதள சேவையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்காகவும் தனியாக போராட்டம் நடத்த வேண்டிவரும்.
தற்போது விவசாயிகள் இடையே பிரிவினையை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. பஞ்சாப் விவசாயிகள், ஹரியானா விவசாயிகள் என்று பிரிக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தும் டெல்லி எல்லைகளைத் தொடர்ந்து, ஹரியானா மாநில உள் மாவட்டங்களிலும் மொபைல் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காசிபூர், சிங்கு எல்லைகளில் போலீஸ் அடக்குமுறையைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி மீண்டும் செல்லத்தொடங்கி இருக்கிறார்கள்.
வீட்டுக்கு ஒருவர் போரட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் உள் மாவாட்டங்களான ரெவாரி, அம்பாலா, பிவானி, கர்னால், குருசேத்ரா, பானிபட், ரோத்தக் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரபிரதேசம் முசாபர்நகரில் நேற்று அரசு கல்லூரி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் கூடியுள்ளனர். இவர்களும் காசிபூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!