India

மத வெறுப்பை பரப்பும் ‘இந்து பஞ்சாயத்து’ - முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட முயலும் இந்துத்வா தலைவர்!

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ‘இந்து பஞ்சாயத்து’ கூட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அமைந்துள்ளது சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம். அங்கு சமீபத்தில் சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

‘இந்து பஞ்சாயத்து’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆனந்த் ஸ்வரூப், “முஸ்லிம்கள் எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டுமெனில், முதலில் அனைவரும் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தமது இஸ்லாத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறுவார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்நிகழ்ச்சி காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் ஆனந்த் ஸ்வரூப், இதுபோன்ற இந்து பஞ்சாயத்துகளை நடத்தி, மத வெறுப்பைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட வலதுசாரிகளின் மத வெறுப்பைப் பரப்பும் நோக்கத்திற்கு அப்பாவிகள் பலியாகிவிடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.

Also Read: ஐ.ஐ.டியிலும் சமஸ்கிருத திணிப்பு : மாணவர்களிடையே விபரீத பரப்புரையில் ஈடுபடும் பா.ஜ.க அரசு!?