India
டெல்லி போராட்டம்: 52வது நாளை எட்டியது; கோரிக்கைகள் ஏற்காவிடில் போராட்டம் தீவிரமாகும் - விவசாயிகள் முடிவு!
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் சேர்ந்த ஹன்னா மொல்லா பேசினார்.
அப்போது, போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக வருகிற (ஜனவரி) 23, 24, 25 தேதிகளில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 26ஆம் தேதி அரசு நடத்தும் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு டெல்லியிலும், மாநிலங்களில் விவசாயிகள் ட்ராக்டர் அணிவகுப்புகளை நடத்துவார்கள் அறிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று பொய் தகவலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
கேரள சட்டமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட்டுள்ளது. இதனை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஜனவரி 26க்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு தோல்வியடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அரசு சட்டங்களைத் திரும்பப்பெற்று விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார். நாளைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுவோம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் 52வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடுமையான குளிர் மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக இதுவரையில் 78 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?