India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.04 கோடியை கடந்தது - பலி எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்வு ! #COVID19
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 16,311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,66,595 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 161 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,51,160 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 19,299 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,00,92,909 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, 2,22,526 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 96.43% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 2.44% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.13% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6,59,209 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18,17,55,831 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!