India
“விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்”: நாடு முழுவதும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து புதிய உத்தரவு !
இந்தியாவில் கொரோனா பரவல் தனியாத நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின் 11-ம் கட்டம் வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற 2021 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ச்சியான குறைந்தாலும், விழிப்புணர்வு, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!