India
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் பாஜக அமைச்சர்.. மோடி அரசுக்கு நீடிக்கும் நெருக்கடி!
2019ம் ஆண்டு வரை மத்திய எஃகு துறை அமைச்சராக இருந்தவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங் தற்போது பா.ஜ.க எம்பியாக இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது மத்திய பா.ஜ.க நிர்வாக குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். இவர் ஹரியான மாநிலம் சம்ப்லா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தர்ணாவில் கலந்து கொண்டார்.
2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்த மூத்த விவசாய சங்க தலைவரான சோட்டுராம் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி எல்லையில் சென்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக பா.ஜ.கவில் தற்போது சலசலப்பும் பரபரப்பும் நிலவுகிறது.
ஏற்கெனவே, விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி வெளியேறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே, பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது, மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!