India
இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு: 21நாள் போர் தோல்வி என பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமா மோடி அரசு?
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 ஆயிரத்து 153 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து நாட்டின் முதல் கொரோனா தொற்று ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டதில் இருந்து இது வரையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4,825 ஆக அதிகரித்துள்ளது.
அதில், 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் குணமடைந்திருந்தாலும் இது வரையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், 29 ஆயிரத்து 885 பேர் குணமடைந்ததை அடுத்து தற்போது 3 லட்சத்து 8 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 மாதங்களுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அண்மைக்காலங்களாக குறைந்து வருவது மக்களிடையே மன ஆறுதலை அளித்திருந்தாலும், தினந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால் 21 நாள் போரில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், லட்சகணக்கானவர்களின் வாழ்வை அழித்துள்ளது என சாடியுள்ளார்.
முன்னதாக 1 கோடியே 78 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்புகளை பெற்று அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!