India
“விவசாயிகளின் 2ம் கட்ட போராட்ட அறிவிப்பால் டெல்லி நேஷனல் ஹைவே மூடல்” : 17ம் நாளாக தீவிரமடையும் போராட்டம்!
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 17 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனிடையே, ஜெய்ப்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதனால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலிருந்து இந்த நெடுஞ்சாலையை நோக்கி விவசாயிகள் செல்லாமல் இருப்பதற்காக இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து ஹரியானா மாநிலம் வழியாக டெல்லி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மானேசர், குருகிராமம் எல்லையில் ஹரியானா போலிஸார் குவிக்கப்படுள்ளனர். டெல்லி எல்லைப்பகுதி மூடப்பட்டுள்ளது. அங்குள்ள சுங்கச்சாவடிகள் இன்று இயங்கவில்லை; குர்கான் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஆக்ரா - டெல்லி நெடுஞ்சாலை வழியாக டெல்லி வரக்கூடிய எல்லைப் பகுதிகளிலும், காசிப்பூர், சில்லா, குண்லி எல்லைகளிலும் போலிஸார் குவிக்கப்பட்டு அந்த எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லிக்கு வரக்கூடிய முக்கிய எல்லைப்பகுதி அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 14ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆர்பாட்டம், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி ஒரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதால் மத்திய மோடி அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதைத் தவிர வேறுவழியில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!