India
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் : ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை! #BiharElectionResults
பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில், 57.05% மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று துவங்கியது. தற்போது முதற்கட்டமாக 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் தொடங்கியது.
இதனிடையே முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பீகாரில் ஆட்சி அமைக்க 122 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.
பீகார் மாநிலத்தில் நான்குக்கும் அதிகமான கூட்டணி களத்தில் இருந்தாலும், நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கும், ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் தலையிலான மெகா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களில் முண்னிலை உள்ளது. ஜே.டி.யு + பாஜக கூட்டணி 60 இடங்களில் முண்னிலை உள்ளது. லோக் ஜனதா கட்சி 04 இடங்களையும், மற்றவை 03 இடங்களையும் பெற்றுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !