India
இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார்கள்: மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்ளையால் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, எவ்வித முன்னறிவிப்பின்றி, தீடிரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்து இன்றோடு 4 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் பணமதிப்பிழப்பு பேரிழப்பு என ட்விட்டரில் பலரும் பணமதிப்பிழப்பின் போது தாங்கள் அடைந்த துயரங்களையும் தெரிவித்து, மோடி அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி தான் உண்மையான காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி கூறுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படவில்லை; அந்த நடவடிக்கையால் பொருளாதாரம் மோசமான விளைளவுகளை சந்திக்கின்றது.
அதுமட்டுமல்லாது வேகமாக வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரத்தை வங்கதேசம் முந்திச் சென்றது. ஆனால் இந்த வீழ்ச்சிக்கு கொரோனா தான் காரணம் என மத்திய அரசு கூறுகிறது. ஒருவேளை கொரோனா காரணம் என்றால், வங்கதேசத்திலும் கொரோனா பாதிப்பு இருந்தது.
ஆதலால், பொருளாதாரச் சீரழிவுக்கு கொரோனா வைரஸ் காரணம் அல்ல. உண்மையான காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும்தான். வரிசையில் இன்று சொந்த பணத்தை மக்கள் டெபாசிட் செய்தார்கள்; அனால் மோடி அந்த பணத்தை எடுத்து அவரது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டார். சுமார் ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்தது. இதனால், இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார் மோடி. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!