India

பாலியல் குற்றவழக்குகளை நீதிமன்றங்கள் எப்படி கையாள வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமின் வழங்கிய போது, பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ராக்கி கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

குற்றவாளிக்கு வழக்கிய ஜாமினை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டது. அதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபோன்ற ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் எப்படி பிரப்பித்தது என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய அரசின் அட்டர்ணி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இது போன்ற உத்தரவுகள் கண்டனத்துக்குறியது. தேசிய மற்றும் மாநில நீதித்துறை பயிற்சி நிறுவனங்கள் மூலம் நீதிபதிகளுக்கு பாலியல் வழக்குகளை கையாள்வதற்கு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கே.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, இது போன்ற பாலியல் வழக்குகளை கையாள்வது தொடர்பாக உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அதுதொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய மத்திய அருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Also Read: “தி.மு.க ஆட்சியில் ‘விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றி தமிழகம் மீட்போம்! இது உறுதி” : மு.க.ஸ்டாலின்