India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80.88 லட்சமாக உயர்வு - பலி எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது! #COVID19
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 48,648 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 563 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,21,090 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 57,386 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 73,73,375 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,94,386 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 91.15% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.35% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 11,64,648 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,77,28,088 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!