India
ஈவ்டீசிங் செய்ததற்கு பதிலடி கொடுத்ததால் சிறுமியை சுட்டுக்கொன்ற ரவுடிகள்.. உ.பியில் தொடரும் கொடூரம்!
ஈவ்டீசிங் செய்த ரவுடிகளுக்கு பதிலடி கொடுத்த 16 வயது சிறுமியை வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
பிரோசாபாத் மாவட்டத்தின் ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டை விட்டு வெளியே வரும் போதெல்லாம் ரவுடிகள் சிலர் அச்சிறுமியை கிண்டல் செய்தும், அநாகரிகமாக பேசுவதையும் வாடிக்கையாக் வைத்திருந்திருக்கிறார்கள்.
அதற்கு அச்சிறுமியும் அந்த ரவுடிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பலான மனீஷ் சவுத்ரி யாதவ், சிவ்பால் யாதவ், கவுரவ் சாக் ஆகிய மூவரும் சிறுமியின் வீட்டில் புகுந்து தாயின் கண் முன்பே நெற்றியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இதனால் சிறுமியின் தாயார் பேரதிர்ச்ச்கிக்கு ஆளானதோடு போலிஸில் புகாரும் அளித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை சுட்டுக்கொன்ற மூவரில் இருவரை கைது செய்திருப்பதாக கூறியுள்ள காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தினர் கூறுவதில் முரண்பாடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் துணை போவதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு காணாத மாநில பாஜக அரசு இந்துத்வ கோட்பாடுகளை பரப்பும் வேளைகளிலும் மதவாத அரசியலிலுமே ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’