இந்தியா

மாடியிலிருந்து வீசி எறியப்பட்ட 15வயது சிறுமி: பாலியல் வல்லுறவுக்கு ஒத்துழைக்காததால் உ.பியில் வெறிச்செயல்

படுகாயமடைந்த சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 மாடியிலிருந்து வீசி எறியப்பட்ட 15வயது சிறுமி: பாலியல் வல்லுறவுக்கு ஒத்துழைக்காததால் உ.பியில் வெறிச்செயல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் தினந்தோறும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

ஹாத்ரஸ் சம்பவத்துக்கு பிறகு ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் லக்னோவை அடுத்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேவ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காத 15 வயது சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து 3 கயவர்கள் தூக்கி எறிந்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

இதனால் படுகாயமடைந்த அந்த சிறுமி அசம்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற இந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்களை கைது செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி சுஷில் தூலே தெரிவித்துள்ளார்.

 மாடியிலிருந்து வீசி எறியப்பட்ட 15வயது சிறுமி: பாலியல் வல்லுறவுக்கு ஒத்துழைக்காததால் உ.பியில் வெறிச்செயல்

சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் மொட்டை மாடியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது சண்டையிட்டதால் தூக்கி வீசிவிட்டார்கள் என சிறுமி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவர் மீதும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலிஸார் சுஷில் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுமியின் மருத்துவ அறிக்கையின் பொறுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக இருக்கக் கூடிய யோகி ஆதித்யநாத் தன் மாநில பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு அரணாக இல்லாமல் குற்றம் புரிந்தவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறார் என தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

banner

Related Stories

Related Stories