India
கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டால் மீண்டும் பாதிப்பு வராது என இருக்காதீர் - ஐசிஎம்ஆர் இயக்குநர் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரையில் 76 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதில் 67 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர் குணமடைந்திருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 775 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேப்போல பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருவது ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பதை மக்கள் நம்பக்கூடாது என ஐசிஎம்ஆர் இயக்குநரான மருத்துவர் பல்ராம் பார்கவா நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
அதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் 3 முதல் 5 மாதங்கள் வரையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
90 நாட்களுக்கு பிறகு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கினால் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். ஆகவே குணமடைந்துவிட்டதால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்ற கற்பிதங்களை நம்பி இருக்காமல் முறையாக கொரோனா தடுப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி உபயோகித்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமாகும் என பல்ராம் பார்கவா தெரிவித்தார்.
Also Read
-
இந்தி influencers-களுக்காக.. இந்தியில் மாற்றப்படும் தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள்..
-
“பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!