India
IPhone 12 சீரிஸ் நான்கு மாடல்களில் அறிமுகம் - இந்தியாவில் என்ன விலை தெரியுமா..?
அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி ஹை ஸ்பீடு 5ஜி வசதியுடன் ஐபோன் 12 சீரிஸ், நான்கு மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபோன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஐபோன் 12, ஐபோன் 12 மேக்ஸ், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 வகைகளில் ஐபோன் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச்சும், மற்ற மாடல்கள் 6. 1 இன்ச்சும் கொண்ட, ஓஎல்இடி டிஸ்பிளே வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், A14 பையோனிக் புராசசர்களுடன், 5ஜி இணைய சேவையை ஏற்கும் வகையிலான தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று சேமிப்புத் திறன்களில் கிடைக்கும்.
இந்த சீரிஸின் டாப் மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி விலை ரூ.1.5 லட்சத்துக்கு மேல் உள்ளது, மேலும் ஐபோன் ப்ரோ மற்றும், ஐபோன் ப்ரோ மேக்ஸின் விலை, இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியின் விலை, முறையே ரூ.79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அவற்றுடன், (Home pod) ஹோம் பாட் மினி ரூ. 9,900 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐபோன் 12 சீரிஸில் ஆப்பிள் சில மேம்பாடுகளைச் செய்துள்ளது. இதில் அனைத்து மாடல்களிலும் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்கள், Dolby விஷன் வீடியோ ரெக்கார்டிங் என்று பல புதிய வசதிகள் உள்ளன.
புதிய ஐபோன்12 சீரிஸ் போன்களுடன் பவர் அடாப்டர் இயர்பட்ஸ், வயர்டு இயர்போன்கள் வராது என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த ஐபோன் 12, 11% மெல்லியது எனவும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஐபோன் மாடல்களிலும் OLED டிஸ்ப்ளேக்கள் என்றும் ஆப்பிள் தெரிவித்தது. ஐபோன் 12 மினி இரண்டும் புதிய 12MP (wide angle) அகலமான கேமராவை கொண்டுள்ளது.
இந்த சீரிஸ் போன்களில் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் பச்சை என்று 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐபோன்கள் இந்தியாவில் வரும் அக்டோபர் 30ந் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !