India
வருகைப் பதிவேட்டில் ஸ்ட்ரிக்ட் கூடாது; எந்நேரமும் மாஸ்க் கட்டாயம்- பள்ளிகள் செயல்பட நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் இதுநாள்வரை செயல்படவில்லை. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன. ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையிலான ஆன்லைன் கல்வியால் பல்வேறு ஊறுகளும் விளைந்தன.
ஊரடங்கு தளர்வுகளை கடந்த செப்.30-ம் தேதி அறிவித்த மத்திய அரசு, அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
* மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்.
* மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
* தேவையெனில் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
* பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* பள்ளிகளில் தனிமனித இடைவெளி அவசியம்.
* எல்லா நேரங்களிலும், ஆசிரியர்களும், மாணவர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
* கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமனித இடைவெளி குறித்த பலகைகள், பேனர்களை பள்ளிகளில் வைக்க வேண்டும்.
* என்.சி.இ.ஆர்.டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும், விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.
* பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
* அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
* கொரோனா காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
* பள்ளியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!