India
இந்தியாவில் தனியாத கொரோனா பரவல்... ஒரே நாளில் 86,052 பேருக்கு தொற்று - 1,095 பேர் பலி : கொரோனா நிலவரம்!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 86,052 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,94,069 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 1,095 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 99,773 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 78,876 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 53,52,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, 9,42,217 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 83.70% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.56% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 14.74% ஆக குறைந்துள்ளது.
கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!