India
தேவையின்றி பணம் வசூலிப்பதாக புகார் : இன்று முதல் டெபிட் /கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமல்!
இந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகிப்பாளர்களிடமிருந்து சமீபகாலமாக தொடர்ந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன. அந்த புகார்களில் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பது தொடர்பாகவும் மேலும் உரிய விளக்கம் அளிக்காதது உள்ளிட்ட புகார்களே அதிகம் வந்துள்ளன. இதனால் டிஜிட்டல் கட்டணங்களைப் பயனர்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி பரிவர்த்தனைகள் அதிகரிப்பதை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் (அக்டோபர் 1, 2020) நடைமுறைக்கு வரும் பல புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில், ஒன்றுதான் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது பற்றிய புதிய விதிமுறைகள்.
வாடிக்கையாளர்களின் அட்டைகளுக்குச் சர்வதேச வசதிகளைத் தேவையின்றி வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர் தானே வந்து கேட்டால் மட்டுமே அந்த சேவையை வழங்கவேண்டும் என்று ஆர்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தாத கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு அந்த சேவையை ரத்து செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கும் ரிசர்வங்கி கூறியுள்ளது.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் ஏ.டி.எம்களில் (உள்நாட்டு) மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களில் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும்.
தற்போது அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் அவர்களின் கார்டுகளுக்கு பரிவர்த்தனை வரம்பை அமைக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏ.டி.எம், பி.ஓ.எஸ், ஈ-காமர்ஸ் அல்லது என்.எப்.சி போன்ற சேவைகளில் ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் அனுமதிக்க அல்லது அனுமதிக்காமல் இருப்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து அட்டைகளுக்கும் Near Field Communication (NFC) சேவையைத் தேவை ஏற்பட்டால் இயக்கவும் அல்லது முடக்கும் விருப்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு மட்டுமே என்றும் மேலும் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இன் பிரிவு 10 (2) இன் கீழ் இந்த புதிய விதிமுறைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!