India
8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை நீக்கக்கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை!
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை தொடங்கியது. இன்று மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் வாதம் நடைபெற்றது.
மத்திய அரசு தரப்பில் வாதிட்ட சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியைப் பெற தேவை இல்லை. திட்டத்தை செயல்படுத்தும்போது மட்டும் அனுமதி பெற்றால் போதும். அதனை சென்னை உயர்நீதிமன்றம் சரியாகக் கருத்தில் கொள்ளாமல் திட்டத்துக்கு தடை விதித்துள்ளது. இது மிக முக்கியமான வளர்ச்சி திட்டம். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்துசெய்து திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
விவசாயிகள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், இந்த திட்டமானது பெருமளவுக்கு விவசாய நிலங்களை சேதப்படுத்தும் திட்டம். விவசாயிகள் பல லட்சம் ஏக்கர் நிலங்களை இழக்கும் சூழ்நிலை உறுவாகியுள்ளது. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலும் பெருமளவுக்குப் பாதிக்கும் என்று வாதிட்டனர்.
மேலும், இன்று மத்திய அரசின் வாதப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாளை சுற்றுச்சூழல் துறை திட்டத்துக்கு அனுமதி மறுத்தால் கையகப்படுத்தி சிதைக்கப்பட்ட நிலங்களை முன்பிருந்தபடியே சிதையாமல் அரசால் எப்படி திருப்பிக் கொடுக்கமுடியும்? எனவே, விவசாயிகளின் நலனையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்துசெய்யக் கூடாது என்று வாதிட்டனர்.
வழக்கு விசாரணையில் வாதம் நாளையும் தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : 'மின்வெட்டே இல்லை' என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!