India

டீ கொடுப்பதும்., உண்ணாவிரதம் இருப்பதும் அப்பட்டமான நாடகமே : எம்.பிக்கள் போராட்டத்தை திசை திருப்ப திட்டம்?

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

பெரும்பான்மை பலத்துடம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்தும், அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவை வரம்பை மீறியதாக கூறி அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 8 எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கிய போராட்டம் இரவு முழுவதும் தொடந்து நடைபெற்றாதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. மேலும் தற்போது வரை, அவர்கள் வெளியேறாமல் வளாகத்திலேயே அமர்ந்திருந்திருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட8 எம்.பிக்களுக்காக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டுவந்துகொடுத்தார். அந்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இவரின் போராட்டத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில்,“மாநிலங்களவை துணைத் தலைவர் என்பவர் தன்னிச்சையான முடிவு எடுக்ககூடியவர் அல்ல; அனைத்து எம்.பிக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால் ஹரிவன்ஷ் அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தார். அதனைக்கண்டித்த எம்.பிக்களைதான் விதிமீறல் என வெளியே அனுப்பியுள்ளார். இந்நிலையில் வெளியேற்ற எம்.பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெருவதற்கு பதிலாக, அவர்களுக்கு டீ கொடுப்பதும், ஒருநாள் உண்ணாவிரம் இருப்பதும் அப்பட்டமான நாடகமே. இது எதிர்கட்சி எம்.பிக்களின் போராட்டத்தை திசை திருப்பவே உதவும்” எனத் தெரிவித்தார்.

Also Read: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள் விடிய விடிய போராட்டம்..!