India
வாய் வித்தையாக இருக்கிறதா மோடி அரசின் தடுப்பு நடவடிக்கைகள்?: இந்தியாவில் பாதிப்பு 40 லட்சத்தை நெருங்கியது
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 26,471,718 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 873,223 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 83,341 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில், 1,096 பேர் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 39,36,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.89% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 76.53% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!