India
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 78,761 பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு தோல்வி?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 25,164,818 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 846,757 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78,761பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், ஒரே நாளில் 948 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.42 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 35,42,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 63,498 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 17 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபத்தாராயிரம் பேர் பலி ஆகியுள்ளனர். உயிரிழப்பு 1.81% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 76.47% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
Also Read
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!