India

தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது, பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.

இதனிடையே, அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட சி.பி.ஐ.எம் சார்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

இந்த நிலையில், வழக்குத் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

பட்டியல் இனத்துக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு செல்லும்” எனக் கூறி, பட்டியலின பிரிவினர் இடையே உள் ஒதுக்கீடு வழங்கும் வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக 7 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் தி.மு.கவிற்கு தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “NLC சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை மக்களுக்கு வழங்கவேண்டும்” - தி.மு.க MLA வேண்டுகோள்!