India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது - மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,585,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 812,517 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,874,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 180,604 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,06,349 ஆகவும், யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,38,036 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது.
கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.
Also Read
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !