India
3 விமான நிலையங்களை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைக்க அதானி திட்டம் - Mr.மோடி இதுதான் சுயசார்பு இந்தியா?
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி குழுமத்திற்கு அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு வருவதற்கு அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என பலரும் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசின் அமைச்சரவை.
கொரோனா தடுப்பு பணிக்களை மேற்கொள்ளாமல், இதுபோல நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மன் நிறுவனம் ஒன்று அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட 3 விமான நிலையங்களை பராமரிக்கவும் இயக்கவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம், ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்தை இயக்கும் ஃப்ளூகாஃபென் மன்ச்சென் ஜிஎம்பிஹெச் (Flughafen München GmbH) என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஃப்ளூகாஃபென் நிறுவனம் அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ ஆகிய மூன்று விமான நிலையங்களை பராமரிப்பதற்காக ஒப்பந்த முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தம் ஃப்ளூகாஃபென் நிறுவனம், விமான நிலையத்தை இயக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் உட்படுத்துகிறது. மேலும் அதன் ஊழியர்களுக்கு உலகளாவிய தரத்திற்கு பயிற்சி அளிக்கிறது.
ஆனால் இதுகுறித்து இருதரப்பினரும் பதில் அளிக்கவில்லை. ஏற்கனெவே தனியார்மயமாக்குதலலை நாட்டு மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவம் ஒன்று இந்திய விமான நிலையங்களை நிர்வகிப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இதனால் பல குற்ற நடவடிக்கை தொடரும் மற்றும் உள்நாட்டு ஊழியர்கள் வேலை பற்போகும் சூழல் உருவாகும். பிரதமர் மோடி சொன்ன சுயசார்பு இந்தியா இதுதானா என பலரும் கருத்துத் தெரிவித்து கேள்வி வருகின்றனர்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?