பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
India

விரைவில் கூடுகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்? NEP, EIA 2020ஐ சட்டங்களாக நிறைவேற்ற திட்டம்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநிலங்களவை செயலாளர் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள தகவலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை அலுவலக வளாகத்தில், நான்கு மிகப்பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர 6 சிறிய திரைகளும், அவையின் 4 கேலரிகளில் அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள ஏ.சி. மூலம் வரும் காற்றில் நோய்த்தொற்றை தடுக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நாடாளுமன்றத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் முறைகளும் கட்டாயமாக்கப்படவுள்ளது.

நாட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களும், அமைச்சர்களும், அதிகாரிகளுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் உறுப்பினர்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மக்கள் நலனுக்கு எதிராக உள்ள புதியக் கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவற்றை சட்டங்களாக கொண்டு வருவதற்காகவே நாடாளுமன்றம் கூட்டப்பட இருக்கிறதா என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.