India
“உ.பி-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை”: சுதந்திர தினத்தில் நடந்த கொடுமை!
பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதாகும் தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை பகாரியா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் விசாரணையின் போது சிறுமியின் வீட்டு அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் கண், வாய் மற்றும் உடல் பகுதியில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலிஸார் பிரேத பரிசோதைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பாக, அவரை சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து சிறுமி உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளர் சந்தோஷ் யாதவ், சஞ்சய் கவுதம் ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், இரண்டும் பேரும் சிறுமி குடும்பத்தோடு இருந்த முன் பகைக் காரணமாக வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிவந்தது.
இதனையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மாயாவதி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை: அமைச்சர் மா.சு. பெருமிதம்!
-
பா.ஜ.க-வை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? : விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி!