India

“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 20,025,245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 733,997 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,199,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 165,617 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 62,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 3.62 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய நாடு முழுவதுமுள்ள 940 அரசு மையங்கள் மற்றும் 462 தனியார் மையங்கள் உள்பட 1,402 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 713 மையங்கள் ரேபிட் டெஸ்ட் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவாக 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரத்து 025 பேராக உள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொரோனா பாதிப்புகள் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது. அதற்கடுத்த இரண்டு நாட்களுக்குள் 19 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மொத்தபாதிப்பு 22 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. கடந்த 6 நாட்களில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.62 லட்சம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி..ஆந்திராவில் தொடரும் கோர சம்பவம்