India
“அவலாஞ்சியில் மட்டுமே 58 சென்டி மீட்டர் மழை பதிவு.. மீண்டும் மிக கன மழைக்கு வாய்ப்பு” : வானிலை தகவல்கள்!
தென்மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழையும், கோவை, தேனி மாவட்டத்தின் மழை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பொய்யும்.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 58, கூடலூர் பஜார் 33, மேல் பவானி 32 , மேல் கூடலூர் 31, நடுவட்டம் 23, தேவாலா 22 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,
அடுத்த 3 நாட்களுக்கு கிழக்கு அரபிக்கடல் ஒட்டிய கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகள், கொங்கண் கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு , மாலத்தீவு பகுதிகளில் பலத்த மற்றும் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்,
அடுத்த 5 நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடலலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலலை 3.5 முதல் 4.3 மீட்டர் வரை எலும்பகூடும்.
Also Read
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!
-
ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : ஒரு வார கால அரசுமுறைப் பயணம்!
-
“நாட்டின் வளர்ச்சியைக் காவு கொடுக்கப் போகிறாரா மோடி?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!