India
சென்னையில் சேமிக்கப்பட்டிருக்கும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் - லெபனான் விபத்தால் மக்கள் அச்சம்!
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிப்பு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
துறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என லெபனான் பிரதமர் ஹசன் தியாப் தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 5 ஆண்டுகளாக சேமிப்பு கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டால் லெபனான் போல வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதால் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறைக்கு சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. அதைச் சுற்றி குடியிருப்புகள் இல்லை. மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!