India
கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடுவதை நிறுத்திய சுகாதாரத்துறை: சமூகப் பரவலை மறைக்கும் மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 16,646,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 656,608 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,433,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150,444 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.82 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் 654 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,83,157 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது மத்திய சுகாதத்துறை அறிக்கையின் மூலமே தெரிய வந்தது. இதனிடையே இன்று வெளியிட்ட அறிக்கையில் தற்போது சிகிர்ச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, குண மடைந்தோர் எண்ணிக்கை மற்றும் பலியானோர் எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது. நேற்றுவரை வெளியிடப்பட்டுவந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி பாதிக்கப்பட்டும் எண்ணிக்கையினால், ஏற்பட்டுள்ள சமூக பரவல் நிலையை மூடி மறைக்கவே மோடி அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களும் தினசரிபாதிப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் வேலையை தொடங்கும்.
நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எடுப்பதற்கு பதிலாக உண்மையை வெளிவாரமால் பார்த்துக்கொள் மோடி அரசு நடவடிக்கை எடுக்கிறது என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!