India
“பலி 32 ஆயிரம் தாண்டியது; பாதிப்பு 13.85 லட்சமாக அதிகரிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 16,202,387 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 648,445 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,315,709 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.85 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 48,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,85,522. ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!