India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.36 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 15,941,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 642,751 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,248,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 148,490 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.36 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 48,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 757 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,36,861 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!