India
“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.38 லட்சத்தை தாண்டியது” : ஒரே நாளில் 45,720 பேருக்குப் தொற்று உறுதி!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 15,374,482 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 630,214 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,100,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 146,183 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.38 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1129 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!