India
“உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,039,853 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 571,659 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,413,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,782 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 1,29,888 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!