India
இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 28,637 பேருக்கு தொற்று உறுதி - இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 12,630,872 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 562,888 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,355,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,403 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 551பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22674 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 1,29,888 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!