India
“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது” - 4 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 12,630,872 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 562,888 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 519 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,20,916 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 1,01,251 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!