India
“DHFL நிறுவனம் ரூ. 3,688 கோடி வங்கி மோசடி” - பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசு கடன் வழங்கும் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றொரு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,300 கோடி மோசடி செய்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளை ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில் கடன் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் DHFL எனப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனமான DHFL, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளையில் ரூ.3,688.58 கோடியை மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் DHFL நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியால் பலர் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பித்து வருவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!