India

“அரசு காப்பகத்தில் இருந்த 57 சிறுமிகளுக்கு கொரோனா - கருவுற்றிருந்த 5 சிறுமிகள்” : உ.பி-யில் நடந்த அவலம்!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஸ்வரூப் நகரில் அரசு சிறுவர்கள் காப்பகம் ஒன்று செயல்பட்ட வருகிறது. இந்த அரசு காப்பாகத்தில் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் விடுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து காப்பகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையை மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்க்கொண்டுள்ளனர்.

அப்போது நடந்த பரிசோதனையில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைவிட அதிர்ச்சி சம்பவமாக காப்பகத்தில் இருந்த 5 சிறுமிகள் கருத்தரிந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 5 சிறுமிகளில் மூன்று பேரை ராமா மருத்துவக் கல்லூரிக்கும், 2 பேர் ஹாலெட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் 52 பேரையும் கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு தடுக்க உத்தர பிரதேச அரசு போதிய நடவடிக்கை எடுக்காததே சிறுமிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே 5 சிறுமிகள் கருத்தரித்தைக் காட்டுவதாக குழந்தைகள் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பிரம்மதேவ் கூறுகையில், “பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவுகளின் பேரில் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 5 மைனர் பெண்கள் கருத்தரித்துள்ளனர். இங்கு அழைத்து வரும்போதே அவர்கள் கருத்தரித்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசைக் காப்பாற்றுவதற்காக மேஜிஸ்ட்ரேட் பொய் சொல்வதாகவும், உரிய விசாரணை நடத்தில்தான் உண்மை தெரியவரும் என எதிர்கட்சியின் வலியுறுத்திவருகின்றனர். மேலும் உத்தர பிரதேச பா.ஜ.க அரசு உண்மைகளை மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: பல்டி பழனிசாமிக்கு ஆதரவாக பல்டி அடித்த நியூஸ்7 தொலைக்காட்சி: ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்!