India
“பா.ஜ.க பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்”: மணிப்பூரில் ஆட்சி கவிழ்கிறது? - மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 60 சட்டப்பேரவைட் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017லில் நடந்த தேர்தலில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 21 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருந்தது போதும் கூட, பா.ஜ.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் சமீபகாலமாக நடந்த மோதல் போக்குகாரணமாக விரிசல் ஏற்பட்ட பா.ஜ.க கூட்டனி தற்போது முழுமையாக உடைந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனையடுத்து பா.ஜ.கவின் கூட்டணி கட்சி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் எனமொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இதனிடையே ராஜினாமா செய்த எஸ்.சுபாஷ்சந்திர சிங், டி.டி.ஹாகீப் மற்றும் சாமுவேல் ஜெண்டாய் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் மணிப்பூரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது காங்கிரஸின் பலமும் 34 ஆக உயர்ந்துள்ளதால் ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பதால் அமைக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!