India
“8-வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை” : பேரிடரிலும் கல்லா கட்ட துடித்துடிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.
ஊரடங்கால் மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களை, மேலும் சிக்கலில் உள்ளாக்குவதற்கு பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து 8-வது நாளாக உயர்த்தி வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதன்பிறகு 83 நாட்கள் கழித்து, கடந்த 7ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் 8வது நாளாக தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் 55 காசுகள் உயர்ந்து 79.48 ரூபாய் எனவும், டீசல் 54 காசுகள் உயர்ந்து 72.13 எனவும் விற்பனையாகிறது. முன்னதாக ஏப்ரலில் ஒரு பேரல் 20 டாலருக்கும் கீழ் சென்றபோது, இதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், சர்வதேச சந்தையைில் கச்சா எண்ணெய் விலை பேரல் 40 டாலரை தாண்டியதை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ10, டீசலுக்கு ரூ13 என உயர்த்தியது. இதுபோல், மாநில அரசுகளும் விலையை உயர்த்தின. இப்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலையை உயர்த்தி வருவது ஊரடங்கு சமயத்தில் வருமானம் இன்றி தவித்து வரும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”