India
“முஸ்லிம் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்த 6 மருத்துவமனைகள்” : டெல்லி பல்கலை. பேராசிரியர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்தபடில்லை.
இந்நிலையில், நாடுமுழுவதும் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அவசரமாக அழைத்து வரும் கொரோனா நோயாளிகளை அனுப்பதில்லை என்றும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிப்பில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
அப்படி, டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள ஆறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் பேராசிரியர் வாலி அக்தர் நட்வி உயிரிழந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் அரபு துறை தலைவர் பேராசிரியர் வாலி அக்தர் நட்விக்கு கடந்த ஜூன் 2ம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டு மிகுந்த சோர்வு நிலைக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியின் பன்சால் மருத்துவமனை, ஃபோர்டிஸ் மருத்துவமனை, புனித குடும்ப மருத்துவமனை, மூல்சந்த் மருத்துவமனை மற்றும் நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனை உள்ளிட்ட ஆறு தனியார் மருத்துவமனைகளை அணுகியுள்ளனர்.
ஆனால் அந்த மருத்துவமனைகள் அனைத்தும் காய்ச்சல் நோயாளிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிலர் படுக்கை இல்லை என்றும் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பேராசிரியர் வாலி அக்தரின் சகோதர் கூறுகையில், “உடல்நிலை சரியில்லாத என் சகோதரர் பலவீனமான நபராக இருந்ததால், அவரது நோயை விட மருத்துவமனையின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்.
கொரோனா பரிசோதனை தொடங்குவதற்கு முன்பே அவர் நம்பிக்கையை இழந்தார். அவரது இறப்பிற்கு அந்த 6 மருத்துவமனை நிர்வாகங்களே காரணம். அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், கொரோனா விஷயத்தில் அரசாங்கங்களின் கூற்றுகள் வெற்றுத்தனமானவை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!