India

கோவிலுக்குள் ஆல்கஹால் கலந்த சானிடைசைர் பயன்படுத்த மறுப்பு: சர்ச்சையை கிளப்பிய ம.பி. சாமியாரின் பலே பதில்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நான்கு ஊரடங்கும் பலனளிக்காத வகையில் அமைந்துள்ள நிலையில், அன்லாக் 1 என்றுக் கூறி மத்திய அரசோ பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளதோடு நாளை (ஜூன் 8) முதல் வழிப்பாட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்களையும் திறந்துக்கொள்ளலாம்.

இதனை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து, நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகளை தூய்மைப் படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள சந்திரசேகர திவாரி என்ற சாமியார் ஒருவர், கோவில்களில் ஆல்கஹால் கொண்ட சானிடைசர் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள சந்திரசேகர திவாரி, மது குடித்தவர்கள் எப்படி கோவிலுக்குள் வர அனுமதி மறுக்கப்படுகிறதோ அதேபோல, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி உபயோகிக்கப்படாது. ஆனால், கோயிலுக்குள் வருபவர்கள் கட்டாயம் குளித்த பின்னரே வரவேண்டும். கோயிலுக்கு வெளியே கைகளை கழுவதற்காக இயந்திரங்கள் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளது.

இந்த சாமியாரின் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்லாமல் இருப்பதற்கே இந்த ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் உபயோகிக்கப்படுகிறது.

Also Read: “உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு - பீகார் தேர்தலை நோக்கி நகரும் அமித்ஷா” : மோடி அரசின் சுயரூபம் அம்பலம்!

அதுமட்டுமல்லாமல், மத்திய பா.ஜ.க அரசே வழிபாட்டு தலங்களில் நாளொன்றுக்கு 3 அல்லது 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், மக்கள் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும், பொதுவான பிரார்த்தனைகளுக்கு அனுமதி கிடையாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இப்படி இருக்கையில், சானிடைசர் உபயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போபால் சாமியார் பேசியுள்ளது நகைப்பையும், முகச் சுழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அப்போ யானை.. இப்போ பசுமாடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடியை வைத்த கொடூரம்!