India

PM CARES நிதி குறித்து கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை : RTI கேள்விக்கு பதில் அளிக்காத அரசு

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares(பி.எம் கேர்ஸ்) எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. பி.எம் கேர்ஸ் எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது.

பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷா கந்துகுரி அவசரகால நிவாரணம் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவி தொடர்பாக விவரங்களை அளிக்கும் படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்து விண்ணப்பித்துள்ளார். குறிப்பாக அந்த மனுவில் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பர்ரர்கற்காக குறிக்கோள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? என அவர் கேள்வி எழுப்பியிருந்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பட்ட விண்ணப்பத்திற்கு 30 நாட்கள் ஆனபோதும் எந்த பதிலும் அரசு அளிக்கவில்லை என ஹர்ஷா கந்துகுரி மேல்முறையீடு செய்திருந்தார். அவர் மேல்முறையீடு செய்த பின்னர் பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்புள்ளது. அந்த தகவலில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் படி பிஎம் கேர்ஸ் நிதி ஒரு பொது அமைப்பு அல்ல” எனத் தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் பிஎம் கேர்ஸ் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் தர மறுக்கிறது எனவே இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஹர்ஷா கந்துகுரி தெரிவித்துள்ளார். பி.எம் கேர்ஸ்க்கு பிரதமர் மோடி தலைவராகவும், மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக ஒரு அமைப்பை பற்றி கேள்வி எழுப்பினால் பொது அமைப்பு அல்ல என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிதி தொடர்பாக வெளிப்படை தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5