India

இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வைத்த வைஷ்ணவி கோவில் நிர்வாகத்தை மிரட்டும் பஜ்ரங் தள் !

காஷ்மீர் பிரதேசத்தின் ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கி.மீ. தொலைவிலுள்ள திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் வைஷ்ணவி கோவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் இந்து யாத்ரீகர்கள், இந்த கோயிலுக்கு வந்து செல்லும் நிலையில், அவர்களுக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களே பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இது விளங்கி வருகிறது.

அந்த வகையில், தங்களுக்கு உதவிவரும் இஸ்லாமியர்களுக்கு நன்றி பாராட்ட முடிவு செய்த வைஷ்ணவதேவி கோயில் நிர்வாகம், கொரோனா காரணமாக அந்தப் பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த இஸ்லாமியர்கள் 500 பேருக்கு ராம்ஜானையொட்டி இப்தார் விருந்து வழங்கி, தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது.

இது பரவலான பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. பலர் இந்தச் செய்தியை சமூகவலை தளங்களில் கொண்டாடி பகிர்ந்தனர். இந்நிலையில், இந்துத்வா மதவெறி அமைப்பான ‘பஜ்ரங் தளம்’,“வைஷ்ணவி கோவில் நிர்வாகத்தின் செயல், இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டது” என்று கொதித்துள்ளது.

“இதற்காக வைஷ்ணவ தேவி ஆலய வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்குமார் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பஜ்ரங் தளம் மாநிலத் தலைவர் நவீன்சூதன் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக முதல்வர் அறிவிப்பு! #CORONALOCKDOWN5