India
“11 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - கொரோனாவால் திணறும் இந்திய பொருளாதாரம்” : மத்திய புள்ளியியல் துறை தகவல் !
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.
இதுதொடர்பாக மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.
அதேப்போல் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.2 சதவீதம் முடங்கியது. ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.
அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இது கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!
-
“கரூர் துயரத்தில் பொய்த் தகவல்களை கூறும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!