India

“கொரோனா பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மகாராஷ்டிரா - 2வது இடத்தில் நீடிக்கும் தமிழகம்”: அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்டது. ஊகானிலிருந்து திரும்பிய மாணவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக பல மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா பரவியது. இந்நிலைலையில், தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு 1,38845 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 6,977 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 154 பேர் பலியுள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 30 லட்சத்துக்கு மேலானோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,645 ஆகவும் அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,041 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக தினசரி சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 16,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 பேர் இதுவரை உயிரிழந்துள்ளன. மத்திய அரசின் தவறான வழிகட்டுதலும் மாநில அரசின் உடனடி நடவடிக்கையும் இல்லாததே கொரோனா பாதிப்பு அதிகரித்தற்கு காரணம் என மருத்துவ குழு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “கொரோனாவை எதிர்கொள்ள உங்களின் மருத்துவப் பணியாளர்கள் வேண்டும்” : கேரளாவிடம் உதவி கேட்கும் மகாராஷ்டிரா!